வலையறிவுக்கான ஒரு கடுங்காற்று
CC-BY-SA இல் Mozilla ஆல்
15 நிமிடங்கள்
இச்செயல்பாடு இசை நாற்காலி விளையாட்டின் ஒரு மாற்று ஆகும். வலையறிவு தொடர்பான பொருள்சார் சொற்றொடர்கள் கூறப்படும் அத்தொடர்களுக்குப் பொருத்தமான நபர்கள் புதிய நாற்காலிகளைத் தேட வேண்டும்.
செயல்பாடு 6 இல் 4
வலையைப் படித்தல்
21 ஆம் நூற்றாண்டுத் திறன்கள்
தொடர்பாடல்வலையறிவுத் திறன்கள்
மதிப்பிடல்கற்றல் நோக்குகள்
- வலை மற்றும் இணையத் தனியுரிமை தொடர்பான மதிப்புறு தொடர்களை நன்கு உள்வாங்கி அதற்கேற்ப செயல்படல்.
பங்கேற்பாளர்கள்
- 13+
- புதிதாக இணையத்தைப் பயன்படுத்துவோர்
தேவைப்படுவன
- நாற்காலிகள்
-
தயாரிப்புகள்
உங்கள் குழுவிற்குப் போதுமான அளவு நாற்காலிகளைத் தயார் செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு சுற்றிலும் அடுத்த சுற்றுக்கான சொற்றொடர்களைப் படிக்கும் ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் நாற்காலிகள் இருக்க வேண்டும். செயல்பாடு தொடர்பான விளக்கத்தை இங்கு காணலாம்:
இந்தச் செயல்பாட்டிற்காக, வலையறிவுத் தலைப்புகளுடன் பொருந்தக் கூடிய சொற்றொடர்களை தயார் செய்து கொள்ளுங்கள். பங்கேற்பாளர்கள் விளையாடும் போது தேர்ந்தெடுக்கும் வண்ணம் இந்தத் தொடர்களை தயாராக கைகளில் வைத்திருங்கள்:
- இணையம் எவ்வாறு இயங்குகிறது என வியப்புறுபவருக்காகப் பலத்த காற்று வீசுகிறுது.
- பல கணக்குகளுக்கு ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துபவருக்காகப் பலத்த காற்று வீசுகிறது.
- குறிமுறையாக்கம் குறித்து அறிந்தவருக்காகப் பலத்த காற்று வீசுகிறது.
- இதற்கு முன்னர் ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கியவருக்காகப் பலத்த காற்று வீசுகிறது.
- இணையத்தில் தனியுரிமையை விரும்புவருக்காகப் பலத்த காற்று வீசுகிறுத.
-
செயல்பாடு
10 நிமிடங்கள்விளையாட்டைத் தொடங்குவதற்கு, அனைவரையும் காலியாக நாற்காலிகள் இல்லாத படி வட்டமாக அமரச் செய்யுங்கள். செயல்பாட்டை நடத்துபவர் நாற்காலி அமராமல் நின்று கொண்டு முதல் சுற்றை "விளையாட" வேண்டும். விளையாட்டு வலையைப் பற்றியது எனக் கூறுங்கள். விளையாட்டை நடத்துபவர் முதல் தொடரைக் கூற வேண்டும், எடுத்துக்காட்டாக:
இணையம் எவ்வாறு இயங்குகிறது என வியப்புறுபவருக்காகப் பலத்த காற்று வீசுகிறுது.
உடனே இணையத்தைப் பற்றி வியக்கும் பங்கேற்பாளர்கள் தாங்கள் அமரந்துள்ள நாற்காலியில் இருந்து எழுந்து புதிய நாற்காலியில் அமர வேண்டும். நாற்காலிகள் இல்லாமல் நின்று கொண்டிருக்கும் நபர் அடுத்த சுற்றை நடத்த வேண்டும். சுற்றுகளை நடத்துபவர்கள் தாங்களே வலை மற்றும் இணையத் தனியுரிமை குறித்து தொடர்களை உருவாக்கலாம், அல்லது செயல்பாட்டுப் பொறுப்பாளர் வழங்கியதிலிருந்து தேர்வு செய்யலாம்.
நிகழ்வு, பயற்சிப் பட்டறை அல்லது வகுப்பின் மையக்கருத்து மற்றும் தலைப்புகள் குறித்து பங்கேற்போர் சிந்திப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் வரையோ அல்லது 5 அல்லது 6 சுற்றுகள் வரையோ விளையாடலாம்.
-
எதிர்பார்க்கப்படும் விளைவுகள்
5 நிமிடங்கள்செயல்பாட்டிற்குப் பின், பங்கேற்பாளர்கள் நாற்காலியை மாற்றாமல் அமர்ந்திருந்த தலைப்புகள் குறித்து கலந்துரையாடுங்கள். தொடர்கள் குறித்து பங்கேற்பாளர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வண்ணம் கேள்விகளைக் கேளுங்கள். எடுத்துக்காட்டாக:
- இணையத்தில் யார் உள்ளடக்கங்களை நிரப்புகிறார்கள்?
- இணையம் யாருக்கு உரிமையானது?
- HTML என்ன செய்கிறது?
- HTML நிரற்றொடர் எப்படி இருக்கும்?
- இணையத்தில் ஒன்றின் வெளித்தோற்றத்தை வைத்து நம்புவதை விட உண்மை குறித்து கேள்வி கேட்பது சிறந்தது ஏன்?