வலை இயக்கவியல் - விரைவுப் பொருத்தல்
CC-BY-SA இல் Mozilla ஆல்
20 நிமிடங்கள்
வலை இயக்கவியல் என்பது நாம் எப்படி இணையத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதைத் தீர்மானிக்கும் கருவிகள், பண்புகள், செயல்களின் ஒரு தொகுப்பாகும். வலை இயக்கவியலைப் புரிந்து கொள்வது நமது தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பாதுகாக்கவும் URL கள், IP முகவரிகள், தேடல் தொடர்கள், புத்தகக்குறிகள் இன்னும் பலவற்றைப் பற்றி புரிந்து கொள்ளவும் அவற்றைப் பயன்படுத்தவும் உதவுகிறது. இந்த இணையமில்லா குழு செயல்பாட்டின் மூலம் வலை இயக்கவியலின் அடிப்படைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இச்செயல்பாட்டை எவ்வயதினருக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைக்கலாம்
செயல் 6 இல் 1
வலையைப் படித்தல் பங்குபெறல்
21 ஆம் நூற்றாண்டுத் திறன்கள்
தொடர்பாடல்வலையறிவுத் திறன்கள்
களமாடல் பாதுகாத்தல்கற்றல் நோக்குகள்
- இணையத்தில் களமாடுவது தொடர்பான வலை இயக்கவியற்றொடர்களைத் தெரிந்து புரிந்து கொள்ளவதுடன் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்தல் குறித்தறிதல்.
- நிகழ்வுப் பங்கேற்பாளர்களிடையே ஒரு குழுமத்தை உருவாக்கல்.
பங்கேற்போர்
- 13+
- புதிதாக இணையத்தைப் பயன்படுத்துவோர்
தேவைப்படுவன
- பேனாக்கள்/குறிப்பான்கள்
- எழுது தாள்கள்
- நேரங்காட்டி
-
தயாரிப்பு
பெயர் அட்டைகளை உருவாக்குதல்: கீழே கொடுக்கபட்டுள்ள ஒவ்வொரு வலை இயக்கவியலுக்கும் பெயர் அட்டைகளை உருவாக்குங்கள். ஒவ்வொரு அட்டையிலும் இரண்டு பக்கங்கள் இருக்கும் படி அமையுங்கள். வலை இயக்கத்தின் பெயரை முன்புறம் எழுதுங்கள் (எ.கா, நினைவிகள் (Cookies)). அதன் விளக்கத்தைச் சில வரிகளில் பின்புறம் எழுதுங்கள் (எ.கா., "நான் வலைதளத்தால் உங்கள் உலாவிக்கு அனுப்பப்படும் ஒரு சிறு உரைத்தொகுப்பு."). நீங்களே இந்த அட்டைகளைச் செயல்பாட்டிற்கு முன் உருவாக்கலாம் அல்லது பங்கேற்பாளர்களின் உதவியை நாடலாம்.
- நினைவிகள் (Cookies): நான் வலைதளத்தால் உங்கள் உலாவிக்கு அனுப்பப்படும் ஒரு சிறு உரைத்தொகுப்பு.
- கற்றை அகலம் (Bandwidth): நான் இணையத்தை உங்கள் கணினிக்கு இணைக்கும் ஒரு மின்னணு மறைவழி. என்னை அதிகரிப்பது வேகமான இணைய இணைப்புக்கு அனுமதிக்கும்.
- புத்தகக்குறிகள் (Bookmarks): உலகளாவிய வலையமைப்பைப் பொறுத்த வரையில், நான் பின்னர் பயன்படுத்தும் வகையில் சேமிக்கப்பட்ட ஒரு அடையாளங்காட்டி.
- வலை நிரலாக்க மொழிகள் (Web Coding Languages): நான் வலைப்பக்கத்திலுள்ள உள்ளடக்கங்களை எப்படி கட்டமைத்து வழங்க வேண்டுமென வலை உலாவிக்குக் கூறுவேன்.
- URL: நான் வளங்களைக் குறித்துக் காட்டும் குறியீடுகள் கொண்ட ஒரு தொடர்.
- தனியுரிமை அமைப்புகள் (Privacy Settings):நான் இணையப் பயனர்கள் தங்களின் தகவல்கள் அணுகப்படும் வழிகள் குறித்து தீர்மானிப்பதற்குச் செயலாற்றுகிறேன்.
- இணைய நெறிமுறை (IP): நான் கணினி வலைப்பின்னலில் பங்குபெறும் ஒவ்வொரு கருவிக்கும் வழங்கப்படும் ஒரு எண்ணியல் அடையாளம். எனது ஆங்கில விரிவாக்கம் internet protocol ஆகும்.
- உலாவி (Browser): நான் உலகளாவிய வலையில் தகவல் வளங்களைத் திரும்பப் பெற, பகிர மற்றும் உட்கடத்துவதற்கான ஒரு மென்பொருள் பயன்பாடு.
பங்கேற்பாளர்கள்: பங்கேற்பாளர்கள் இணையத்திற்குப் புதியவர்களாக இருப்பின், அவர்களுக்கு வலையியக்கவியல் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது என்பதைத் தெரிவிக்க ஒரு வழியைக் கண்டறியுங்கள். அது கலந்துரையாடலாகவோ, பாடத்திட்டமாகவோ அல்லது கேள்வி பதில் இன்னும் பிற வழிமுறைகளாகவோ இருக்கலாம். பங்கேற்பாளர்கள் தங்களிடம் உள்ள வலை இயக்கவியல் பண்புக்கூறாக மற்றவர்களிடம் நடித்துக் காட்ட வேண்டும். இம்முறையில், கற்போர் ஒருவரை மற்றவருக்கு அறிமுகப்படுத்துவதின் மூலம் வலை இயக்கவியலைப் பிறருக்கு கற்பிக்கலாம். வலை இயக்கவியல் குறித்து ஒவ்வொரும் நன்கு அறிந்து கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகும்.
-
செயல்பாடு
15 நிமிடங்கள்செயல்பாடு அறிமுகம்: செயல்பாட்டில் பங்கேற்பவர்களை குழுவாக்கி ஒவ்வொருவரிடமும் ஒரு பெயரட்டையை வழங்குங்கள். ஒவ்வொருவரும் தங்களிடம் கொடுக்கபட்ட பெயரட்டையின் இருபுறமும் எழுதியவற்றை கூர்ந்து படிக்கும் படி கூறுங்கள். ஒவ்வொரும் அவர்களிடமுள்ள அட்டையில் குறிப்பட்ட வலை இயக்கக்கூறாகச் செயல்பட வேண்டும். செயல்பாடு தொடங்கியதும், இரண்டு நிமிடங்களில் அறையிலுள்ள மற்ற கூறுகள் குறித்து அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
செயல்பாட்டை தொடங்குதல்: 2 நிமிட இடைவெளிகளில் நேரங்காட்டியை அமைத்துக்கொள்ளுங்கள். நேரம் தொடங்கியதும் ஒவ்வொருவரையும் ஒரு இணையைத் தேர்வு செய்யும் படி கூறுங்கள் (இரட்டைப்படை எண்ணிக்கையில் பங்கேற்பாளர் இருப்பின் இம்முறை மிகச்சரியாகப் பொருந்தும், ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருப்பினும் செயல்பாட்டை நடத்தலாம்). இரண்டு நிமிடங்களில் அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதுடன் கீழே கொடுக்கப்பட்ட குறுங்கேள்விகளில் சிலவற்றை மற்றவர்களிடம் கேட்கலாம். இரண்டு நிமிடங்கள் முடிந்த பின், இன்னொரு இணையைக் கண்டுபிடித்து செயல்பாட்டைத் திரும்பச் செய்ய வேண்டும். இவ்வாறு குழுவிலுள்ள ஒவ்வொருவரும் மற்றவரைச் சந்திக்கும் வரை செயல்பாட்டைத் தொடருங்கள்.
- நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
- உங்கள் நண்பர்கள் எப்படிப் பட்டவர்கள்?
- நமக்கிடையே என்ன தொடர்பு?
- உங்கள் வயதென்ன?
- நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
-
எதிர்பார்க்கப்படும் விளைவுகள்
5 நிமிடங்கள்செயல்பாடு முடிந்து பின் அனைவரையும் வட்டமாக அமரச் செய்து செயல்பாட்டினைக் குறித்து கலந்துரையாடும் படி கூறுங்கள். அவர்கள் சந்தித்த இடர்பாடுகள், வேடிக்கையான கணங்கள், அவர்கள் கற்றவை குறித்து விவரிக்கக்கூறுங்கள்.